மும்பை: மகாராஷ்டிராவில் பெய்துவரும் தொடர் கனமழையால் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மகாராஷ்டிராவில் 3 நாள்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை எதிரொலியாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் மழையால் உஜ்ஜையினி அணை நிரம்ப, அதனை திறக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் நிரா, பீமா நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக, சோலாப்பூர் மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் உள்ள  கிராமங்களைச் சேர்ந்த 8,400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். கிராமங்களில் சிக்கியோரை மீட்க தேசியப் பேரிடர் மீட்புப் படை குழு வரவழைக்கப்பட்டுள்ளது.