தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை!!

சென்னை:

தமிழகம், புதுச்சேரி கடற்கரை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய செய்திகுறிப்பில், ‘‘தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர்.

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யக் கூடும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.