சென்னை:

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கொட்டிய மழை காரணமாக, சென்னையின் புறநகர் பகுதிகள் மீண்டும் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. கடந்த  2015ம் ஆண்டு  சென்னை புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் காரணமாக வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய 2 நாளை மழையின் தாக்கம், 2015ம் ஆண்டைய பாதிப்பை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது.

மேலும் இரண்டு நாட்கள் இதுபோல மழை நீடித்தால், புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தேசிய பேரிடர் மீட்பு படையையும், படகுகளையும் நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இரவு பகல் என தொடர்ந்து கொட்டிய மழையால்,  விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

வடசென்னையின் முக்கிய பகுதிகளான கணேசபுரம் மேம்பாலம், ஜமாலியா போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கிய தால், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாயினர்.

அதுபோல சென்னையுன் புறநகர் பகுதிகளும் கடந்த 2 நாள் மழைக்கு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. ஆலந்தூர், மடிப்பாக்கம், ராம்நகர், புழுதிவாக்கத்தில் உள்ள பாலாஜி நகர், ராவணன் நகர், ஜெயாநகர், கணேஷ் நகர், சோழிங்கநல்லூர், அம்பத்தூர், வளசரவாக்கம், போரூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

சென்னையின் பிரதான சாலையான ஓஎம்ஆர் சாலைக்கு அருகே உள்ள பெருங்குடி, கல்குட்டை போன்ற பகுதிகளில் மழைநீரால் சூழப்பட்டு தனித்தீவு போல காட்சியளிக்கிறது.

தென்சென்னை பகுதியான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேங்கைவாசல்,  பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் அவதிப்பட்டனர். சிலர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளுக்கு சென்றனர்.  பலர் அரசு அமைத்துள்ள ல் நிவாரண முகாம்களில்  தங்க வைக்கப்பட்டனர்.

சேலையூர் மற்றும் செம்பாக்கம் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வரும் நிலையில், மழைநீரும் பெருக்கெடுத்த தால், குடியிருப்பு பகுதிகள் ஆங்காங்கே தீவுகள் போல் காட்சியளித்தன. தாம்பரம் – வேளச்சேரி சாலை, தாம்பரம் – முடிச்சூர் சாலை, அகரம் தென் சாலை, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, மேடவாக்கம் – பெரும்பாக்கம் சாலை, மேடவாக்கம் – பொன்மார்சாலை, மேடவாக்கம் – மடிப்பாக்கம் சாலை என பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாம்பரம், இரும்புலியூர் அருகே மதுரவாயல் பைபாஸ் சாலை வரையுள்ள தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.  கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பெரும் பாதிப்புக்குள்ளான  முடிச்சூர் , மண்ணிவாக்கம், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் கடந்த 2 நாள் பெய்த மழைக்கே  வெள்ளம் பெருக்‍கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை பாதிக்‍கப்பட்டுள்ளது. தற்போதைய வெள்ளம் கடந்த 2015ம் ஆண்டை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பெரும்பாலான வீடுகளுக்‍குள் மழைநீருடன், கழிவுநீரும் புகுந்துள்ளதால், துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர. இனால்,  பாம்பு உள்பட  புழு மற்றும் பூச்சிகள் வீடுகளுக்குள் நுழையும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இதனால் பலர்,  அங்கிருந்து பலர் தற்காலிகமாக தங்களது விடுகளை காலி செய்து வேறு இடங்களுக்‍கு சென்றுள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்,.  மழை வெள்ளத்தால் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க கீழ்மட்ட அளவில் துறை வாரியாக அதிகாரிகள், நிபுணர்கள், தன்னார்வ அமைப்புகள் அடங்கிய பேரிடர் மேலாண்மை குழுவை அமைக்க கோரிய மனுவை உடனடியாக விசாரித்து அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் எச்சரித்து இருந்தது. 

ஆனால்,  கடந்த 2015 ஆம் ஆண்டு் ஏற்பட்ட வெள்ளச் சேதத்திற்கு பின்பும் தமிழக அரசும், அதிகாரிகளும் இன்னு  பாடம் கற்கவில்லை. ழைநீரை சரியான முறையில் வெளியேற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கவில்லை. இதன் காரணமாகவே மீண்டும் பல பகுதிகளில் சாதாரண 2நாள் மழைக்கே  வெள்ளக்காடாக மாறி உள்ளது.

இதற்கிடையில்,  மழைநீர் தேக்கம் குறித்து புகார்களை கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மழைநீர் தேக்கம், சாய்ந்த மரக்கிளைகள் மற்றும் இதர புகார்கள் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் 24 மணி நேரம் இயங்க கூடிய கட்டுபாட்டு அறையின் 044-25384520, 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். என்று கூறப்ப்டடு உள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி 19 இடங்களில் மழைநீர் தேங்கியும், 11 இடங்களில் மரக்கிளைகள் விழுந்தும் உள்ளன. அனைத்து இடங்களிலும் தேங்கிய மழைநீர் மற்றும் விழுந்த மரக்கிளைகள் மாநகராட்சி பணியாளர்களால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் 16 சுரங்கப்பாதைகளும், நெருஞ்சாலைத்துறை பராமரிப்பில் 6 சுரங்கப்பாதைகளும் உள்ளன. இவ்விடங்களில் மழைநீரை வெளியேற்ற ஏதுவாக 60 எண்ணிக்கையில் உயரழுத்த பாம்புகள், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற 570 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.