புயலை தொடர்ந்து அரியலூரில் மழை போல் கொட்டும் கடும் பனி

அரியலூர்:

ஜா புயல் காரணமாக மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்த நிலையில், நேற்று இரவு கடும்பனி பெய்தது. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்டம் முழுவதும் பனி மூட்டத்தால் இருட்டான நிலையே தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்கின்றனர்.

கஜா புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் அரியலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வந்தது. நேற்று பிற்பகலுக்கு பிறகு மழை நின்றது. அதைத்தொடர்ந்து மின் விநியோகம் செய்யப்பட்டது.

கஜா புயலின் மாவட்டத்தின் பல பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகள், மரங்கள் முறிந்து விழுந்தன. திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகிலும், ஜெயங்கொண்டம் சீனிவாசநகரில் வீடு ஒன்றிலும், உட்கோட்டை, கொக்கரணை கிராமத்திலும் சாலையில் மரங்கள் விழுந்துள்ளன. இதேபோல் உத்திரக்குடி வயல்வெளி உள்பட பல இடங்களில் ஏராளமான மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.

சாலைகளில் விழுந்த மரங்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறை, பொதுமக்கள் உதவியுடன் வெட்டி அப்புறப் படுத்தப்பட்டு வருகிறது., மின்கம்பங்கள் சரிசெய்யும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது.  அதுபோல குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரினை வெளி யேற்றவும் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் அங்கு பனி பெய்து வருகிறது. மழை ஓய்ந்துள்ள நிலையில் மழை போல அதிக அளவு பனி பெய்வது மக்களிடையே வியப்பை  ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பனி மூட்டம் ஏற்பட்டுள்ளது.