டில்லியில் வரலாறு காணாத குளிர்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டில்லி :

லைநகர் டில்லியில் வரலாறு காணாத அளவுக்கு குளிர் வாட்டி எடுக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

டில்லியில் அதிகரித்து வரும் குளிர் தற்போது,  6.2 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பனிமூட்டத்தால் விமானம் மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பல விமான சேவை நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளது.

டில்லி மற்றும் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிப்படைந்துள்ள னர். எதிரில் வருபவர்களுக்கு கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவி வருவதால் பலர் வாகனங்கள் இயக்குவதை தவிர்த்து வருகின்றனர்.

அதுபோல  பஞ்சாப், ஹரியானா போன்ற வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.