பந்திபோரா,

காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் பொழிவால், பள்ளத்தாக்கு பகுதிகளில் பனிச்சரிவு நிகழ்ந்து வருகிறது. இதில் 5 ராணுவ வீரர்கள் உள்டப 9 பேர் பலியாகி உள்ளனர்.

பனிச்சரிவில் சிக்கி மரணம் அடைந்த 9 பேரில்  5 பேர் பாதுகாப்பு படை வீரர்கள், மேலும்  4 பேர் பொதுமக்கள்.

காஷ்மீர் மாநிலத்தில் கண்டேர்பல் மாவட்டத்தில் உள்ள பண்டிபோரா பள்ளத்தாக்கு பகுதியில் இந்த சோகமயமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

சோனாமார்க் அருகே ராணுவத்தினர் வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது, அந்த பகுதியில் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் பனிச்சரிவில்  சிக்கினர். பனிக்கட்டிள் அவரை மூடியது. சுமார் 5 அடிக்கும் மேலாக பனிக்கட்டிகள் குவிந்தது.

உடனடியாக ராணுவ மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பனிச்சரிவில் சிக்கிய இறந்தவர்களின்  உடல்களை மீட்கப்பட்டதாக ராணுவ அதிகாரி கூறினார்.

 

மேலும் மற்றொரு இடமான பண்டிபோரா குரெஷ் பகுதியில் நடைபெற்ற பனிச்சரிவில் சிக்கி 4 பொதுமக்கள்  பலியாகினர். இது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்ற ராணுவ வீர்ர்கள் அங்குள்ள பொதுமக்களுக்கு தேவையான  உதவிகள் புரிந்தனர். பனிச்சரிவில் சிக்கிய 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை முதல் கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் பனிச்சரிவும் ஏற்படுகிறது.

இதுகுறித்து காஷ்மீர் அரசு வடக்கு மற்றும் தெற்கு பகுதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.