சென்னை

சென்னை நகரில் மைலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வளி மண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரங்களுக்குக் கன மழை பெய்யும் எனச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.  குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ராணிப்பேட்டை,சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

மேலும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கடலூர் அரியலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இத்துடன் நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் திருவல்லிக்கேணி, மைலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மத்திய வங்கக் கடல் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உருவாக உள்ள குறைந்த தாழ்வழுத்தப் பகுதியால் அக்டோபர் 19 முதல் கனமழையுடன் கூடிய சூறாவளிக் காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அக்டோபர் 19-ம் தேதி வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகள் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 20 வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 21, 22 தெற்கு மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 23-ம் தேதி தெற்கு மகாராஷ்டிரா, கோவா,கர்நாடகா கடலோர பகுதிகள் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.