சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

சென்னை:
நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருப்பதை முன்னிட்டு தொடர்ந்து பெய்து வரும் மழையினால், சென்னையில் பல இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செவ்வாய் காலை துவங்கி தொடர்மழை பெய்து வருகிறது.இதன்காரனமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக எழும்பூர், வேப்பேரி, பூந்தமல்லி, நுங்கம்பாக்கம் மற்றும் கீழ்பாக்கம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.அதேபோல் விமான நிலையத்தில் இருந்து கிண்டி செல்லும் சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

நிவர் புயல் காரணமாக சென்னை-திருச்சி விமானம் ரத்து

நிவர் புயல் காரணமாக சென்னை-திருச்சி விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. இன்று இரவு 8.35க்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.