எம் ஜி ஆர் நூற்றாண்டு நிறைவு விழா : போக்குவரத்து நெரிசலில் மக்கள்

--

சென்னை

ன்று மாலை நடக்க உள்ள எம் ஜி ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை வரும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதியுறுகின்றனர்.

தமிழக அரசின் சார்பில் கடந்த ஒன்றாண்டுக்கும் மேலாக  எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.   இந்த விழாக்களின் நிறைவு விழா இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ளது.   இந்த விழாவில் எம்ஜி ஆரின் சாதனைகள், அவருடைய மக்கள் தொண்டு உள்ளிட்டவைகள் நினைவு கொள்ளப்பட உள்ளன.

இன்று மாலை சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் இந்த விழா நடைபெற உள்ளது.  இந்த விழா சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற உள்ளது.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம் ஜி ஆர் பொன்மொழி தொகுப்பை வெளியிடுகிறார்.

இந்த விழாவுக்காக நகர் முழுவதும் சுமார் 17000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தபட்டுள்ளனர்.   ஆயினும்  சென்னைக்கு வரும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.    பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த விழாவில்  பங்கேற்க வருவதால் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் வண்டிகள் ஊர்ந்து செல்கின்றன.   அந்த பாதையில் செல்லும் மக்கள் இதனால் மிகவும் துயருற்று உள்ளனர்.

You may have missed