கோல்டுகோஸ்ட் :

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்று அசத்தினார்.

காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் இந்தியா, நேற்று  நடைபெற்ற  துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்பட  3 பதக்கங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் இந்திய வீராங்கனை ஹீனா சிந்து தங்கம் வென்றுள்ளார்.

ஹீனா சிந்து ஒரு பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாக்சிங்கில்,   46-49 எடை பிரிவில், இந்திய வீரர் அமித் பங்கள், 91கிலோ எடை பிரிவில நமன் தன்வார் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர். இதன் காரணமாக இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.