இந்த வாரம் அமெரிக்க பாராளுமன்றக் கமிட்டி “பணியிட ஆரோக்கிய திட்டங்களின் ஒரு பகுதியாக மரபணு சோதனை எனும் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க பாராளுமன்றம் இதனை நிறைவேற்றினால், மரபனுச் சோதனையில் பங்கேற்க மறுக்கும் ஊழியர்களை முதலாளிகள் கடுமையான தண்டனைகள் அளிக்க முடியும்.

தற்போது வரை, மரபணு தனியுரிமை மற்றும் பாகுபாடின்மையைப் பாதுகாக்கும் மத்திய சட்டங்கள்கீழ் முதலாளிகளுக்குத் தன் தொழிலாளியினை மரபனு சோதனைக்கு உட்படுத்த முடியாது. ஆனால், தற்போது அமெரிக்காவின், கல்வி மற்றும் பணியாளர் குழுவினால், புதன்கிழமையன்று நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா, முதலாளிகளுக்கு இருந்து தடைகளைத் தகர்த்து, தன் ஊழியர்களிடம் உடல் ஆரோக்கியத்தில் அக்கறைக் கொண்டு இந்தச் சோதனை நடத்தப்படுமேயானால் அனுமதிக்க வழிவகை செய்துள்ளது.

இதுபோன்ற திட்டங்கள் தொழிலாளர்களின் உடல்நிலையைக் கண்காணிக்க மற்றும் அவர்களின் சுகாதார மேம்படுத்த நிறுவங்களுக்கு உதவுகின்றது – குறிப்பாய், உடல்நலத்தைப் பேணும் ஊழியர்கள், தாமாக முன்வந்து முழு உடல் பரிசோதனை செய்துக் கொண்டு உடற்தகுதியை நிரூபித்தால் அவர்களுக்குக் காப்பீட்டுக் கட்டணத்தில் அதிகளவில் சலுகை மற்றும் 50% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்படுவது அமெரிக்காவில் பிரபலமாகி வருகின்றது. உடலில் அதிகக் கொழுப்பு உள்ள தொழிலாளர்களுக்குக் கொழுப்பைக் குறைக்க உதவுவது முதல், புகைப் பிடிக்கும் தொழிலாளியிடம் அதிகளவு காப்பீட்டுத் தொகை வசூலிப்பது வரை எதுவும் சாத்தியம்.

இது சட்டமாக நிறைவேற அமெரிக்காவின் எல்லா சபைகளில் உள்ள கமிட்டிகளின் ஒப்புதல் தேவை. மேலும் செனட் இதனை அங்கீகரிக்க வேண்டும்.
ஒரே ஒருக் கமிட்டி மட்டும்தான் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. மற்ற சபைக் கமிட்டிகள் மதிப்பாய்வு செய்து வருகிறது.
ஆனால், இந்த மசோதாவை எதிர்த்துக் கண்டனக் குரல்கள் எட்டுதிக்கில் இருந்தும் பாயத்துவங்கிவிட்டன.

ஏற்கனவே பாராளுமன்ற ஜனநாயகக் குழுக்கள் தன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில் இந்தக் குழு அனுப்பிய ஒரு கடிதத்தில், – டைம்களின் குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்க அகாடெமி ( AARP), தேசிய மகளிர் சட்டம் மையம் போன்ற நுகர்வோர், சுகாதார மற்றும் மருத்துவ ஆலோசனை குழுக்களின் பிரதிநியாய் கிட்டத்தட்ட 70 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.
இந்தச் சட்டம், இயற்றப்பட்டால், மாற்றுத் திறன் கொண்ட அமெரிக்கர்கள் அடிப்படை தனியுரிமை விதிகளைக் கேலிகூத்தாக்குவதுடன் 2008ல் இயற்றப்பட்ட மரபணுத் தகவல் பாகுபாடின்மை சட்டத்தின் (ஜினா, GINA) நீர்த்து போகச் செய்துவிடும் அபாயம் உள்ளது என விமர்சித்து உள்ளனர்.

அமெரிக்க காங்கிரஸ் ஜினா(GINA) சட்டத்தை , ஊழியர்களின் ஜீன்களில் உள்ளத் தகவலை அடிப்படையாகக் கொண்டு நிறுவன முதலாளிகளோ சுகாதார காப்பீடு நிறுவனகளோ ஒருவர் மீது பாகுபாட்டைக் காட்டிவிடக் கூடாது என்பதற்காக இயற்றியது. அதே சட்டம், ஊழியர்கள் தாமாக முன்வந்து உடல்ஆரோக்கிய திட்டங்களின் பகுதியாக ஜீங்கள் குறித்த தகவல் வழங்கினால் விதிவிலக்கு உள்ளது. ஆனால், இந்த ஜினா (GINA) சட்டம் முழுக்க முழுக்க தன்னார்வத்துடன் மட்டுமே வழங்க வேண்டும் , இந்த ஜீன்கள் குறித்த தரவு வழங்குவதற்காக ஊக்கத் தொகையோ, தகவல் வழங்க மறுத்தால் அபராதம் விதிப்பதையோ தடை செய்துள்ளது.

ஆனால் இந்தப் புதிய சட்டத்தின் மூலம் , முதலாளிகளிடம் அத்தகைய தகவல் தரமறுக்க விரும்பும் ஊழியர்களிடம், முதலாளிகள் ஒருவரின் சுகாதார காப்பீடுகளுக்காக நிறுவனம் செலவளிக்கும் மொத்தச் செலவில் 30 சதவீதம் வரை அபராதம் விதிக்க அனுமதிக்கும்.

மனித மரபியல் நிபுணர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்கன் சொசைட்டி அறிவியல் கொள்கை இயக்குனர், டெரக் ஸ்கோல்ஸின் கூறுகையில், “ சுகாதார காப்பீடு மற்றும் ஒரு மனிதனின் மரபணு தனியுரிமைப் பாதுகாப்புக்கும் இடையே அரசு ஒரு மோசமான தேர்வைச் செய்துள்ளது வருத்தமளிக்கின்றது” என்றார். மசோதாவை எதிர்த்து, அரசு இதனைக் கைவிட வேண்டும்” என ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்த மசோதாவை ஆதரிக்கும் குழுக்கள் சார்பாக அதன் செய்தி தொடர்பாளர் ஒருவர் சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ” சுகாதார காப்பீ ட்டு செலவுகளைக் குறைக்க மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள் ஊக்குவிக்க வழிவகை செய்யும் ஒரு தன்னார்வ திட்டம் பங்கேற்க விரும்பும் ஊழியர்களிடையே ஒரு அவநம்பிக்கையை விதைக்கும் எதிரிகளின் முயற்சியால் தவறான தகவல் பரவி வருகின்றன” என்றார்.

தற்போது இயற்றப்படவுள்ள சட்டம், முதலாளிகள் தங்களின் ஊழியர்குறித்த உடல் உபாதைகளைத் கட்டாயப் படுத்தித் தெரிந்துக் கொண்டு, அவருக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய வியாதிகளை முன்கூட்டியே கணித்து அவருக்கு நல்லது செய்யவும் பயன்படும், ஒருவரை வேலையை விட்டு நீக்க வகைசெய்யும். லாபத்தை மட்டுமே குறியாய் இயங்கும் நிறுவனங்கள் ஊழியர்களின் உடல்சுகாதாரத்தில் அக்கறை செலுத்தும், அவர்களின் சிகிச்சைக்காகச் செலவளிக்கும் என நம்புவது பயனளிக்குமா?