செல்ஃபி மோகத்தின் உச்சம்: விமான கடத்தியவருடன் பயணி செல்ஃபி ?

இன்று உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய எகிப்து-ஏர் விமான கடத்தல் சம்பவத்தின் கிளைமேக்ஸ் வேடிக்கையாக முடிந்தது.

download

இன்று செய்ப் எல்டின் முஸ்தபா  என்பவர் போலி வெடிகுண்டுகளை உடம்பில் கட்டி, விமானியை பயமுறுத்தி, விமானத்தை கடத்தி சைப்ரசில் தரை இறக்கினார்.

பின்னர் அவரை போலிசார் கைது செய்தனர்.

 தம்முடைய முன்னாள் மனைவியை சந்திக்க விரும்பி, விமானத்தை சைப்ரசில் தரை இறக்கியதாக கைது செய்யப்பட்டவர் தெரிவித்தார்.

ஒரு மர்மமான பயணி (பிணைக் கைதியாக இருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது)  கடத்தல்காரனுடன் செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளது  சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வாறு நடைபெரும் சாத்தியமில்லை இது வெறும் ஃபோட்டாஷாப் வேலை என பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.  சிலர்,  அவரை தைரியம் கொண்ட மர்ம மனிதன் என வாழ்த்தியுள்ளனர்.

 ஃபோட்டாஷாப்பில்   உருவாக்கப்பட்டதோ இல்லையோ,  மக்களை பெருங்களிப்படையச் செய்த ட்வீட் சில:

selfie hijack egypt
1. ஒருவன் மனிதவெடிகுண்டுடன் செல்ஃபிஎ எடுத்துள்ளான். தெய்வப்பிறவி ! ஹா ஹா ! 2. இந்த செல்ஃபியை பார்த்தபின் நான் தர்கொலை செய்யப்போகின்றேன்.

 

selfie hijack 2
1: ஒருவன் தன் மனைவியைக் காண விமானம் கடத்துகிறான். மற்றொருவன் அவனுடன் செல்ஃபி எடுக்கிரான். 2. போலி-வெடிகுண்டு வைத்து விமானத்தை கடத்திவனுடன் செல்ஃபி எடுத்த செயல் வரலாற்றில் இடம்பெறும்.