Random image

போலி பணி நியமன ஆணை விவகாரத்தில் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது! அமைச்சரும் உடந்தையா?

சென்னை:

ருத்துவக்கல்லூரி முதல்வரின் கையெழுத்தை போட்டு,  போலியாக  பணி நியமனை ஆணை வழங்கியதாக தமிழக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறைகேட்டில் அமைச்சரும் உடந்தையா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அவரது தனி உதவியாளர்  விக்னேஷ், மருத்துவ துறை யில் போலியாக கையெழுத்து போட்டி பணி நியமன ஆணை வழங்கியதாக கைது செய்யப்பட் டுள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநர் பணியிடத்துக்கு, கறம்பக்குடி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (23) என்பவர், பணி நியமன ஆணையுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ஏ.எல். மீனாட்சி சுந்தரத்திடம் கொடுத்துள்ளார்.

அதைக்கண்ட மீனாட்சி சுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். தான் கையெழுத்து போடாத நிலையில், அந்தப் பணி நியமன ஆணை போலி என்பதை அறிந்து கொண்டவர், உடனடியாக   மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

அதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் மூலம் புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியைச் சேர்ந்த  விக்னேஷ்வரன் என்பவரிடம் ரூ. 2 லட்சம்கொடுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வரின் கையெழுத்தைப் போட்டு போலி நியமன ஆணையை தயாரித்தது வழங்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, போலி ஆணை தயாரித்ததாக, கார்த்திகேயன், பிரபாகரன், விக்னேஷ்வரன் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

விக்னேஷ்வரன்,  தமிழ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறைகேடான செயல் அமைச்சருக்கு தெரியாமல் எப்படி நடைபெற்றது என்று கேள்வி எழுப்பி உள்ள நெட்டிசன்கள், இதில்  அமைச்சருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், இதுபோல மற்ற மருத்துவமனைகளிலும் பணி நியமனங்கள் பெற்றிருக்க வாய்ப்பு உள்ளது என்று சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.