வினீத் ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ஹெலன்’.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது இப்படம் .

‘ஹெலன்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.

தமிழ் ரீமேக் உரிமையை அருண் பாண்டியன் கைப்பற்றி தயாரித்து வருகிறார்.

தற்போது ‘ஹெலன்’ இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றி உள்ளார். இதில் அன்னா பென் நடித்த கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தகவலை ‘ஹெலன்’ இயக்குநர் மதுக்குட்டி சேவியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.