மெரிக்க விண்வெளி நிறுவனமான  நாசா செவ்வாய்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்ப உள்ள சேதி நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம், ஆனால், தற்போது பல கட்ட சோதனைக்குப் பிறகு  ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தை நோக்கி கபறக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட்  புரோபில்சன் ஆய்வகத்தில் இந்த சிறிய ஹெலிகாப்டர் பல கட்ட சோதனைக்குப் பிறகு 2020ம் ஆண்டு  ரோவர் திட்டத்தில்  செவ்வாய்க்கு அனுப்பப்பட உள்ளது

செவ்வாய்க்கு செல்லும் இந்த ஹெலிக்காப்டர் எடையில் மிகச் சிறியது, 1.8 கிலோ  ளவே உடை யது  இந்த ஹெலிகாப்டர்,  இது குறைந்த எடை கார்பன் ஃபைபர், அலுமினிய, சிலிகான் மற்றும் தகடுகளை உள்ளடக்கியது.

இந்தி ஹெலிகாப்ட் திட்டமானது செவ்வாய் கிரகத்திற்குத்த தேவையான வாகனங்களை எப்படி  உருவாக்குவது, வடிவமைப்பது, செயல்படுத்துவது என பல கட்ட ஆய்வுகளை நாசா மேற்கொள்ள வுள்ளது. இது  செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் சோதனை  திட்டம்.

செவ்வாயில் பறப்பது என்பது சாதாரண விசயமில்லை,  அங்கே சக்தியை எரிக்க முடியாது, ஏனெனில் அங்கே ஆக்சிஜன் கிடையாது. எனவே செவ்வாய் சூழலுக்கு பெரிய இறக்கைகள் அவசியம். அதுமட்டுமல்லாமல் இந்த ஹெலிகாப்டரை பூமியில் இருந்து கட்டுப்படுத்த இயலாது. எனவே இந்த ஹெலிகாப்டர் சுயமாகவே இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிரமப்பட்டு ஏதற்கு செவ்வாய் இந்த ஹெலிகாப்டர் அனுப்பப்படவேண்டுமென்றால் தேவைகள் தான்.

எதிர்காலத்தில் நாசாவிற்கு  எந்த சுற்றுப்பாதையை  தேர்ந்தெடுக்கலாம், எந்த  இடத்தில் விண்கலங்களை தரையிறக்கலாம் போன்ற விபரங்களை  அதிக துல்லியத்துடன் தெரிந்துகொள்ள இந்த ஆய்வானது ஒரு வாய்ப்பாக விளங்குகிறது.

இதுமட்டுமல்லாமல்  எரிமலைகளின் வழியேவும் பயணித்து அதன் சாதக/பாதகங்களையும் விளக்குகிறது. இந்த ஆய்வின் இறுதியில் செவ்வாய்க்கு பயணிக்க ரோவர் திட்டமா  அல்லது லாண்டர் திட்டத்தின்  கீழ் செயல்படுத்தலாமா என்பதை அறிவதும் நாசாவின் நோக்கம்

இந்த ஹெலிகாப்டர்கள் சுயமாக இயங்கக்கூடியது, அதுமட்டுமல்லாமல் 90 விநாடிகள் மட்டுமே இயங்கக்கூடியது,

செவ்வாய் கிரகத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்களை இயங்கிட அதிபுத்திசாலித்தனமாக பொறியி யல் அறிவு தேவைபடுகிறது.  செவ்வாயில் ஹெலிகாப்டர் சூரிய சக்தியை கொண்டுதான் செயல் படும், இது தனது மின்கலனில்(பேட்டரி) மின்சாரத்தினை சேமித்துக்கொள்கிறது. செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும்

இந்த ஆய்வுக்காக கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் Jet Propulsion  ஆய்வகத்தில் வெற்றிட அறை ஒன்று உருவாக்கப்பட்டு செவ்வாய்கிரகத்தின் சூழல் உருவாக்கப்பட்டு அதில் இந்த ஹெலிகாப்டர்களை கொண்டு சோதனை செய்கின்றனர்

செவ்வாய்கிரகத்தின் வளிமண்டல  அடர்த்தி பூமியின் வளிமண்டல அடர்த்தியோடு ஒப்பிடுகை யில் 1% சதவீதம்  மட்டும் இருக்கும்  இந்த  ஹெலிகாப்டர் தன்னிச்சையாக பறக்கிறது என்பதை உறுதி செய்ய   ஒரு 2 அங்குல (5 சென்டிமீட்டர்) மட்டுமே தேவைப்படுகிறது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த ஹெலிகாப்டர்கள் தன்னிச்சையாக பறந்ததை உறுதி செய்துகொண்டனர்.

செவ்வாய் கிரக ஆய்வு அதிகமாக எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல இயலாது. என்பதால் ரோவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஹெலிகாப்டர்கள் கொண்டு செல்லப்படு கின்றன

இதன் மூலம் ரோவர்சால் முற்றிலும் அணுக முடியாத பகுதிகள் அவை ஆராயலாம். மாதிரிகள் சேகரிக்க அல்லது துளையிடுவதற்கு சிறந்த புள்ளிகளை கண்டுபிடித்து தரவும் இந்த ஹெலிகாப் டர்கள் உதவும்

பத்திரிக்கை.காம் இணையதளத்தில் புதன்தோறும் விண்வெளி விந்தைகள் என்ற தொடர் மூலம் விண்வெளி  செய்திகளை கொடுத்துவருகின்றோம். எனவே தவறாமல் விண்வெளி விந்தைகள் தொடரைப் படித்து உங்கள்  விண்வெளி பற்றி அறிவினை வளர்த்துக்கொள்ளலாம்