ஊத்துக்கோட்டை :
ஆந்திர மாநிலத்தில் சரக்கு கடைகளை இன்று திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பலநாள் சோர்வாக இருந்த குடிமகன்கள் அனைவரும் இன்று காலை 7 மணி முதலே உற்சாகம் பொங்க குவியதொடங்கினர்.
இதில் தமிழகத்தின் ஊத்துக்காடு பகுதியை ஒட்டிய ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் குவிந்த மதுபிரியர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே, போலீசார் வந்து அவர்களை ஒழுங்கு படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தை ஒட்டிய ஆந்திர எல்லையோரத்தில் இருக்கும் சத்தியவேட்டில் “ஹலோ… கடைய எப்போ திறப்பீங்க” என்று தங்களுக்கு வேண்டியவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அங்கு குவிந்ததால் இந்த தள்ளுமுள்ளு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
இதுபோல், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டிய கர்நாடக எல்லையோரத்தில் இருக்கும் அடிபெல்லேயிலும் இது போன்ற நிலைமை நிலவியதாக தெரிகிறது.
எது எப்படியோ, நைட்டெல்லாம் கண்ணுமுழிச்சி “கடையெப்பா திறப்பாங்க… கடையெப்போ திறப்பாங்கன்னு…” கேட்டு கிட்டு இருந்த குடிமகன்கள், கடைதிறந்த உடன் சைக்கிள் கேப்-ல எஸ்கேப் ஆகி போனதுல பச்சை, ஆரஞ்சுனு எல்லா கலரையும் மிக்ஸ் பன்னி ஒரு ஆனந்த உலகத்துல மெதந்துகிட்டு இருக்காங்க.