தனது மகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டார் ரோஹித் சர்மா!

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது மகளின் பிஞ்சு விரலை பிடித்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

rohit

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவிற்கு 2019ம் ஆண்டு மகிழ்சியானதாகவே தொடங்கியுள்ளது. டிசம்பர் 31ம் தேதி ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த தகவலை அறிந்ததும் ஆஸ்திரேலியாவில் இருந்த ரோஹித் சர்மா உடனடியாக இந்தியா திரும்பினர். இதனை தொடர்ந்து அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், தலைவர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

rrohit

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ரோஹித் சர்மா பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. டிவிட்டர் பதிவில் தனது செல்ல மகளின் பிஞ்சு விரலை பிடித்தபடி எடுக்கப்பட்ட புகைப்படத்துடன், “ உலகிற்கு ஹலோ…2019ம் ஆண்டு ஆண்டு சிறப்பாக இருக்கட்டும் “ என பதிவிட்டுள்ளார்.

ரோஹித் சர்மாவின் இந்த படம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.