சுயஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணியுங்கள்! மக்களுக்கு நீதிமன்றம் அறிவுரை

சென்னை:

ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்ககோரி தொடரப்பட்ட வழக்கின் இன்றைய விசாரணை யின்போது, சுய ஒழுக்கத்துடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும்  மக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை கூறி உள்ளது.

வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து பொறுப்புடன் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

கொரட்டூர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியவும், கார் போன்ற 4 சக்கர வாகனங்களில் பயணிப்போர், சீட் பெல்ட் கட்டாயம் அணிய உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும்  ஹெல்மெட அணிய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஹெல்மெட் அணிவது அதிகரித்தாலும் பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும், ஹெல்மெட் அணிய வேண்டும் என்று  சட்டவிதிகள், நீதிமன்ற உத்தரவு, காவல்துறை யின் விழிப்புணர்வு இருந்தாலும் சுயஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மக்களுக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

அதி வேகத்தில் வாகனங்களில் செல்பவர்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறார்களா? என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், தமிழக போக்குவரத்து காவல்துறையில் போதுமான காவலர்கள் இருக்கிறார்களா? மேலும் எத்தனை காலி பணியிடங்கள் உள்ளன என்று பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவுகளை மட்டும் பிறப்பிப்பதால் எந்த பயனும் இல்லை என கூறிய நீதிபதிகள்,  இது தொடர்பாக நவம்பர் 28-ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Helmet Case: Courts Advice to public, Wear Helmet With Self-Respect
-=-