போலீசார் கூட ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதில்லை! உயர்நீதி மன்றம் அதிருப்தி

சென்னை:

ருசக்கர வாகனத்தில் செல்வர்கள் கட்டாயக ஹெல்மெட் உபயோகப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கின் இன்றைய விசாரணையின் போது,  போலீசார் கூட ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை  நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, “இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிவது அவசியம் என்றும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியது. இதுகுறித்து காவல்துறை மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

கட்டாய ஹெல்மேட் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது இதுவரை தொடரப்பட்ட வழக்குகள், வசூலித்த அபராதம் குறித்த அறிக்கை போக்குவரத்து போலீசார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,  கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வில்லை என  அதிருப்தி தெரிவித்துள்ளது. பள்ளி கல்லுரிகளில் கூட ஹெல்மெட் குறித்து மாணவருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் போலீசார் கூட இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிவதில்லை. காரில் செல்லும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட சீட் பெல்ட் அணிவதில்லை அரசு உருவாக்கும் சட்டத்தில் உள்ளதையே அமல்படுத்த சொல்கிறோம் என  சென்னை உயர்நீதி மன்றம் கூறியது.