ஹெல்மெட், சீட் பெல்ட்: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை:

ரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், காரில் பயணம் செய்பவர் களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.

நாடு முழுவதும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இரு சக்கரத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், கார் போன்ற 4 சக்கரம் ஓட்டும் வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்த மத்தியஅரசு மசோதாவில்  4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், காரில் பயணம் செய்வோரும் கட்டாய சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் கூறியிருந்தது. விதிகளை மீறுவோருக்கு ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள் ளது.

ஆனால், பெரும்பாலானோர் விதிகளை பின்பற்றாமல் ஹெல்மெட் அணியாமலும், சீட் பெல்ட் போடாமலும் பயணித்து வருகின்றனர். இதன் காரணமாக விபத்தின்போது உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதுதொடர்பான வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது,  இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும், கார்களில் சீட் பெல்ட் போட வேண்டும் என்றும் வலியுறுத்திய சென்னை உயர்நீதி மன்றம்,  இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து  தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இரண்டு சக்கர வாகனங்களில் இருசக்கர வாகனங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும்,  எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்படுவதால் இரவு நேரங்களில் பிற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும், கார்களின் முகப்பு விளக்குகளில்  கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சோதனை செய்து வரும் 27ந்தேதி  அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கனவே உபி,மகாராஷ்டிரா போன்ற  சில மாநிலங்களில் ஹெல்மெட் அணியாத  வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் போட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: helmet, Seat Belt: Chennai High Court important order, சீட் பெல்ட்: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு, ஹெல்மெட்
-=-