குஜராத்தில் அமைதியை நிலைநாட்ட உதவுங்கள்: யோகி ஆதித்யநாத்

லக்னோ:

குஜராத்தில் அமைதியை நிலை நாட்ட பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உ.பி. முதல்வர்யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

குஜராத்தில் கடந்த வாரம் சபர்காந்தா மாவட்டத்தில் 14 மாத பெண் குழந்தையை வெளிமாநில தொழிலாளர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய அவதூறு காரண மாக,  பீகார், உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர்களை, குஜராத்திகள் கடுமையாக தாக்கி வருகின்றனர்.

இதன் காரணமாக  வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் குஜராத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தி முதல் விஜய் ருபானி முயற்கிளை மேற்கொண்டு வருகிறார். இருந்தாலும் தாக்குதல் சம்பவங்களும், அண்டை மாநில மக்கள் வெளியேறி வருவதும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில்,  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,   குஜராத்தின் அமைதி மற்றும் இயல்புநிலை கொண்டு வர அம்மாநில முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில் கலவரம் காரணமாக  புலம் பெயர்ந்த மற்ற மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குஜராத்திற்கு திரும்புங்கள் என்று குஜராத் மாநில முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.