நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவுங்கள்… தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு கோரிக்கை

சென்னை:

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், வாழ்வாதாரம் இழந்துள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவுங்கள் என்று தமிழகஅரசுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, கலைப்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு செயலாளர் கே.சந்திரசேகரன், தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகமெங்கும் சுமார் இரண்டரை லட்சம் நாட்டுப்புறக் கலைஞர்கள் வறுமையில் வாடி வருவதாகவும், இவர்களில் 45ஆயிரம் அரசு பதிவு பெற்ற சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு வருடத்தில் 100 நாட்கள் முதல் 120 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் குடும்பத்திற்கு குறைந்தது 3 மாதமாவது தமிழகஅரசு நிதி உதவி வழங்கி ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.