கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் புகைப்படங்களை ட்வீட் செய்த தொகுதி எம்.பி. ஹேமமாலினி

download
 மதுரா பகுதியில் பெரும்  கலவரம் நடந்த போது, அது குறித்து கவலைப்படாமல் படப்பிடிப்பில் இருந்தார் அத் தொகுதியின் எம்.பி.யான ஹேமமாலினி. மேலும் அப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நேற்று அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது பெரும் கலவரம் வெடித்தது. இதில் இருபது பேருக்கும்  மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சமயத்தில் தனது படப்பிடிப்பு ஒன்றில் மும்முரமாக இருந்தார் அத் தொகுதியின் எம்.பி.யும் பாஜக பிரமுகருமான நடிகை ஹேமமாலினி. தவிர அந்த சமயத்தில் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்துள்ளார். ஹோமமாலியின் செயலுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.