ஹேமமாலினி மகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள்..

 

தமிழ்நாட்டில் பிறந்து இந்தியில் கனவுக்கன்னியாக ஜொலித்த ஹேமமாலினி, இந்தி நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஈஷா தியோல், அகானா தியோல் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

ஈஷா தியோல் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. மூத்த மகள் ஈஷாவுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இளையமகள் அகானாவுக்கு தூரியன் என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த அகானாவுக்கு மும்பை மருத்துமவனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன, இரண்டும் பெண் குழந்தைகள்.

இரண்டு குழந்தைகளுக்கும் பெயர் கூட வைத்து விட்டார்கள். இது குறித்து அகானா தனது வலைத்தளத்தில் “எனக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களுக்கு அஸ்ட்ரேயா, வோஹ்ரா என பெயர் சூட்டியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி