ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள்…!

டல் ஆரோக்கியமாக இயங்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அவசியமாகும். இல்லையென்றால்  உடலில் நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். ரத்த உற்பத்தி அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

ஹீமோகுளோபின் அளவு வெகுவாக குறைந்தால், அது இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கக்கூடும். அதன் அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும்.  ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணமாக சொல்லப்படுகிறது.

 

இருப்பினும் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும். ஆகவே ஃபோலிக் அமில குறைபாடு  இருந்தால், ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். ஃபோலிக் அமிலம் அதிகமாக இருக்கக் கூடிய  பச்சை காய்கறிகள், ஈரல், அரிசி சாதம், முளைத்த  பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகள் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு இரண்டு  அல்லது மூன்று வீதம் எடுத்துக் கொண்டு வந்தால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

 

நாவல் பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ளுவதால் இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் ரத்தமும் அதிகரிக்கும். தினமும் இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.

 

பீட்ரூட் சாப்பிட்டு வந்தாலும் புதிய ரத்ததின் உற்பத்தி அதிகமாகும். செம்பருத்திப் பூ நடுவில் இருக்கும் மகரந்தத்தை மட்டும் தவிர்த்து, சுற்றியுள்ள இதழ்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்  ரத்தம் விருத்தியடையும்.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்ததை சுத்தப்படுத்தும்.

தினமும் இலந்தைப் பழம் சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

 

மேலும் பசியை தூண்டும் தன்மை கொண்டதால் இதை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

 

ஆரோக்கியம் என்பது நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் இருக்கிறது என்பதை எல்லோரும்  உணரவேண்டும். எந்த உணவையும் தவிர்க்கமல் சேர்த்துக் கொண்டாலே உடலில் நோய் முடிந்த அளவு தவிர்க்கப்படும்…!

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Hemoglobin levels increase in foods ...!, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள்…!
-=-