சென்னை,
ரபரப்பாக பேசப்பட்ட மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
குறைந்த விலையில் மூலிகைப் பெட்ரோல் கண்டுபிடித்ததாக பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை.
ramar1
1999-ல் தனியாக நிறுவனம் தொடங்கி மூலிகைப் பெட்ரோல் தயாரித்து விற்பனை செய்தார். ஆனால், அது கலப்பட பெட்ரோல் என்றும், அதனை பயன்படுத்தி வாகனங்களை இயக்கினால் ஏற்படும் புகை ஆபத்தானது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து ராமர் பிள்ளையை கைது செய்து விசாரணை நடத்தியது.
விசாரணையின் முடிவில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 2,27 கோடி மோசடி செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்ட சிலர்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ramar2
இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ராமர்பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.