இனிமே மு.க.ஸ்டாலினை மு.க. ஸ்டாலின் என்று  குறிப்பிடக்கூடாதாம்

தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலினை குறிப்பிடும்போது பெயரைக் குறிப்பிடக்கூடாது என்று தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து  ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றறிக்கை என்று சமூகவலைதளங்கலில் ஒரு படம் வெளியாகி உள்ளது.

அதில், “முரசொலியில் இன்று (31.01.2017) முதல் அனைத்து செய்திகள் மற்றும் விளம்பரங்களிலும் “கழக செயல் தலைவர்” அவர்கள் என்றே குறிப்பிடப்பட வேண்டும். தளபதியின் பெயர் இடம் பெறக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து நெட்டிசன்கள் பலர், “ குறிப்பிட்ட அறிவிப்பில் தளபதியின் பெயர் இடம் பெறக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறதே.. அவர் பெயரே அதுதானா,? மு.க. ஸ்டாலின் என்பது இல்லையா” என்று கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.