இந்தியா –  இலங்கை கிரிக்கெட்: மழையால் பாதிக்க வாய்ப்பு

 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது  மற்றும் கடைசி ஒருநாள் போட்டி  மழையால் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.   தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒன் டே மேட்ச் நடந்துவருகிறது. இதிலும் 4-0 என்று விகிதத்தில் தொடரை இந்தியா கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில், ஐந்தாவது  மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடக்கிறது.

கொழும்புவில் மழை பெய்ய 100 சதம் வாய்ப்பு இருப்பதால் ஆட்டம் தடைபடும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

கொழும்பு நகரின் வெப்பநிலையை பொறுத்தவரை இன்று அதிகபட்சம் 29, குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசாக இருக்கும். மேலும், லேசான மழை முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published.