னாஜி

னிமேல் கார்பரேட் சமூகப் பொறுப்பு நிதியை ஆய்வுகளுக்குப் பயன்படுத்தலாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2013 ஆம்  வருட நிறுவனங்கள் சட்டத்தின்படி, ரூ.500 கோடி நிகர மதிப்புகொண்ட நிறுவனங்கள் அல்லது ரூ.1,000 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், ரூ.5 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருக்கும் நிறுவனங்கள், தங்களது முந்தைய 3 ஆண்டுகள் லாபத்தின் சராசரியில் 2 சதவீதத்தை சமூக நடவடிக்கைகளுக்கு (Corporate Social Responsibility – CSR) செலவு செய்ய வேண்டும்.

கடந்த 2014 ஆம் வருடம் ஏப்ரல் 1 முதல் இந்தச் சட்டம்  அமல்படுத்தப்பட்டது.   இவ்வாறு சமூகப் பங்களிப்புக்காக ஒதுக்கப்படும் நிதியை அந்தந்த  நிறுவனங்கள் நேரடியாகச் செலவு செய்யலாம், அல்லது தங்களது சொந்த அறக்கட்டளை மூலமாகவும், லாப நோக்கமற்ற சேவை நிறுவனங்கள் மூலமாகவும் செலவு செய்யலாம் எனவும் சட்டத்தில் கூறப்பட்டது.

இந்தச் சட்டத்தினால் சமூகத்தில் நலிந்த நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையைச் சீரமைத்து அவர்களை சமூகத்தில் மதிப்புடன் வாழ இந்த நிதி துணைபுரிந்தது.  அத்துடன்  கல்வி, குடிநீர், சுகாதாரம், சுற்றுச்சூழல், சமூகத்தை மேம்படுத்துதல், குழந்தைகள் நலன், இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த நிதியைச் செலவு செய்து வந்தன.

நேற்று கோவாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், “இனிமேல் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் 2 சதவீதத்தை என்ஐடி,மற்றும்  ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் ஆய்வு பணிக்குச்  செலவிடலாம். அதிலும்  குறிப்பாக அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்றவற்றில் நடக்கும் ஆய்வுகள், மேம்பாட்டுக்குச் செலவிடலாம்.

அத்துடன் மத்திய அரசு, மாநில அரசு, ஆகிய அனைத்து அரசு அமைப்புகள்,   பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் சார்பில் இயங்கும் நிறுவனங்களின் ஆய்வுப் பணி, மேம்பாட்டுக்கும் செலவிடலாம்.  அது மட்டுமின்றி  பல்கலைக்கழகங்களில் நடக்கும் ஆய்வுப் பணிகள், ஐஐடிகள், சுயாட்சி அங்கீகாரம் பெற்ற தேசிய ஆய்வுக்கூட்டம் ஆகியவற்றுக்குச் செலவிடலாம்.

ஏற்கனவே மத்திய அரசு ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ஏராளமாகச் செலவிட்டு வருகிறது. இப்போது, இதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதியும் செல்லும்போது ஆய்வுகள், மேம்பாட்டுப் பணிகள் ஊக்கமடைய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.