நெட்டிசன்

“வெங்காயம்” திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அவர்களின் முகநூல் பதிவு:

சென்சாருக்கு onlineல் மட்டுமே அப்ளை செய்ய முடியும் என்று சொல்லிவிட்டனர்.அங்கே 50 வயதுக்கு கீழே யாருமே வேலை செய்யவில்லை.எனது விலாசத்தை கீபோர்டில் டைப் செய்து முடிப்பதற்குள்ளே மாலை 5 மணி ஆகிறது.அந்த வெப்சைட்டை ப்ராட்பேண்ட் ல் மட்டுமே ஓப்பன் செய்ய முடியும்.

நான் வெறும் user id பெருவதற்கு மட்டுமே அப்ளை செய்து 2 மாதம் ஆகி விட்டது இன்னும் ஒரு வெங்காயமும் கிடைக்கவில்லை.

நண்பர்கள் யாரும் உடனடியாக சென்சார் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் எந்த கமிட்மெண்ட்டும் செய்து விட வேண்டாம்.குறைந்தது ஒன்னரை மாதம் ஆகும்.

தயாரிப்பாளர் ஒருவர் 5 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூட சொல்லிவிட்டாராம்.

சிசேரியனில் பிறந்த டிஜிட்டல் இந்தியாவில் நம் உயிரை வாங்குகிறார்கள்.