புதுடெல்லி: வரும் நாட்களில், ஓட்டுநர் உரிமம் தொடர்பான பல விஷயங்களுக்கு, ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஓட வேண்டிய அவசியமில்லை. அதுதொடர்பான மொத்தம் 18 வகையான சேவைகளுக்கு ஆன்லைன் சேவை வசதியை அளித்துள்ளது மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்.

இந்த சேவை, ஆதார் அடிப்படையிலான அங்கீகார தொடர்பற்ற சேவையாகும். இதன்மூலம், ஒரு பிரஜை, ஆர்டிஓ அலுவலகத்திற்கு, எதற்கெடுத்தாலும் நேரில் செல்ல வேண்டிய தேவையில்லை.

குறிப்பாக, ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல், போலி உரிமம் பெறுதல், விண்ணப்பத்தைப் பதிவு செய்தல், கற்றுக்கொள்பவர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட பலவற்றுக்காக ஆர்டிஓ அலுவலகம் செல்லத் தேவையில்லை.

இதற்கு பதிலாக, ஆதார் அட்டையைப் பய்ன்படுத்தினால், அது அடையான ஆவணமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் டெலிவரி சேவை மேற்கொள்ளப்படும்.

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டுமென்று மத்திய அரசு வெளியிட்ட ஒரு வரைவு அறிவிப்பை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.