புதுடெல்லி: ஆயுர்வேதா பிரிவில் முதுநிலைப் படிப்பை நிறைவுசெய்தவர்கள், இனிமேல், ஆர்தோபேடிக்(எலும்பியல்), ஆப்தல்மாலஜி(கண் மருத்துவம்), இஎன்டி மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகள் உள்ளிட்ட பலவற்றில் பொது அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த அறுவை சிகிச்சைகள் தொடர்பாக, ஆயுர்வேதா முதுநிலைப் பட்டதாரிகள், தேவையான பயிற்சிகளைப் பெற, மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இனிவரும் நாட்களில், ஆயுர்வேதா முதுநிலைப் படிப்பில், இந்த அறுவை சிகிச்சைகள் தொடர்பான பகுதிகள் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டின் இந்தியன் மெடிசின் சென்ட்ரல் கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்து, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தத்தையடுத்து, அந்தச் சட்டம் இனிமேல், இந்தியன் மெடிசின் சென்ட்ரல் கவுன்சில்(போஸ்ட் கிராஜுவேட் ஆயுர்வேதா எஜுகேஷன்) அமெண்ட்மென்ட் ரெகுலேஷன் 2020 என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.