டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் இனி ஆன்லைனில்…. தமிழகஅரசு முடிவு

சென்னை: அரசு பணிகளுக்கு ஊழியர்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணயம் இனிமேல் அரசு தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், முதல்கட்டமாக  தமிழக அரசு துறைகளில் பணியாற்றும், பல்வேறு நிலை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, பல்வேறு தகுதிகள் அடிப்படையில், பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கு, துறை ரீதியான தேர்வுகளில், ஊழியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை எழுத்துத் தேர்வு மூலம் தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இனிவரும் காலங்களில்  துறை தேர்வுகளை, ஆன்லைன் முறையில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு நடத்தும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.