சென்னையில் இனி லாரிகளில் குடிநீர் விநியோகம் கிடையாது…

சென்னை:

சென்னையில் இனி லாரிகளில் குடிநீர் விநியோகம் கிடையாது என்று உள்ளாட்சித் துறை அறிவித்து உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில்  6.3 டிஎம்சி நீர் இருப்பு உள்ளதால் கூடுதல் குடிநீர் வழங்க  தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

லாரிகள் தண்ணீர் பிடிக்கும்போது மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில்,   இனிமேல் குழாய்கள் மூலமே தண்ணீர் விநியோகிக்கப்படும் என உள்ளாட்சித் துறை கூறி உள்ளது.

தமிழக முதல்வர் உத்தரவின்படி நாளை முதல் நாள் ஒன்றுக்கு கூடுதலாக  50 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்றும்,  குழாய்கள் மூலமாகவே விநியோகம் நடைபெறும் என்றும்,
1000 தெருக்களில் 700 எம்எல்டி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில், குடிநீர் பிடிக்கும்போது சமூக இடைவெளித் தேவை என்றும் வலியுறுத்தி உள்ளது.