சண்டிகர், 

சில நேரங்களில்   எதிர்பாராத தீர்ப்புகளை நீதிபதிகள் அறிவித்து நம்மை அதிரவைத்து விடுகிறார்கள்.நேற்றுமுன்தினம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார் லூதியானா நீதி அரசர். வழக்கு மிகவும் சுவாரஸ்யமானது.கடந்த 2007 ம் ஆண்டு ஜலந்தர் அருகில் உள்ள கடனா கிராமத்தில் ரயில் நிலையம் கட்ட   விவசாயி சம்பூரன் சிங் என்பவரது நிலத்தை ரயில்வே துறை ஆர்ஜிதம் செய்தது. தனக்கு இழப்பீடு வேண்டும் என்று அந்த விவசாயி லூதியானா நீதிமன்றம் சென்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, விவசாயிக்கு இழப்பீடாக ரூ.1.47 கோடி வழங்க உத்தரவிட்டார்.

அப்போது அதை ஏற்றுக்கொண்ட ரயில்வே நிர்வாகம் விவசாயிக்கு ரூ 42 லட்சம் தான் கொடுத்தது. மறுபடியும் நீதிமன்றத்தின் படியேறிய விவசாயிக்கு, நீதிபதி வழங்கிய தீர்ப்பு ஜாக்பாட்டாக அமைந்தது.

ஆம் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் வெறும் 42 லட்சம் மட்டும் வழங்கியதால் கோபமடைந்த நீதிபதி ஜஸ்பால் வர்மா, அமிர்தசரசுக்கும் டில்லிக்கும் இடையே ஓடும் ஸ்வர்ணா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விவசாயி சம்பூரன் சிங்கிடம் ஒப்படைக்கும்படி ஆணையிட்டார்.

இதுமட்டுமல்ல விவசாயியை லூதியானா ரயில்நிலைய ஸ்டேஷன் மாஸ்டராகவும் நியமித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுகளை ரயில் டிரைவரிடம் எடுத்துச் சென்று வழங்கப்பட்டன.  நீதிபதியின் புரட்சிகரமான இந்த தீர்ப்பு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.