சென்னை:

மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

இதையடுத்து கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் இருந்தால் மற்றும் கொரோனா குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண்: 044 4612 2300ஐயும் தெரிவித்து உள்ளது.

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள தமிழக அரசு, அதற்கான 5 அமைச்சர்களையும், சிறப்பு அதிகாரிகளையும் நியமித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள பொதுமக்கள்  கொரோனா நுண்கிருமி தொற்று சம்பந்தமான கேள்விகளுக்கான பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல வாரியான தொலைபேசி  தொடர்பு எண்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

மேலும்,  உங்களுக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் இருந்தால் மற்றும் கொரோனா குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய பொதுவான உதவி எண்: 044 4612 2300ஐயும் தெரிவித்து உள்ளது.

இதுமட்டுமின்றி,  வீட்டில் இருந்தபடியே வீடியோ அழைப்பின் மூலம் கொரோனா நோய் தொற்று தொடர்பான சந்தேகங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பெற பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘GCC Vidmed’ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.