பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு….!

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 15 ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். ‘நாச்சியார்’ பட நடிகை இவானாவும் நடிக்கவுள்ளார் . இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ‘ஹீரோ’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார்.