Random image

கேரள வெள்ளம்: முதுகை படிக்கட்டாக்கி உதவிய மீனவருக்கு ‘மராஸ்ஸோ’ கார் பரிசு

கொச்சி:

பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மீட்பு பணியின்போது, வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்ட மீனவர்கள், பெண்கள் படகில் ஏற உதவியாக தனது முதுகை படிக்கட்டாக அமைத்து உதவி செய்த மீனவருக்கு கார் பரிசு அளிக்கப்பட்டது.

கேரளாவில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர். மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான வீடுகளும் சேதமடைந்தன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் முப்படைகள், தேசிய பேரிடர் மீட்பு குழு உள்பட மீனவர்களும் பெருமளவில் உதவி செய்தனர்.

400-க்கும் மேற்பட்டவர்கள் பலி யாயினர். பல வீடுகள், கட்டிடங் கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தின் போது தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு பலரை உயிருடன் மீட்டனர். எனினும் சில இடங்களில் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை.
மீனவர்கள் தங்களுடைய படகுகளுடன் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வந்தனர். அப்படி மீட்கும்போது, சில இடங்களில் பெண்கள் படகில் ஏற சிரமப்பட்டபோது, அவர்கள் படகில் ஏற வசிதியாக மீனவர் ஜெய்சால் என்பவர் கீழே குனிந்து தனது முதுகை படியாக பயன்படுத்தி படகில் ஏறுமாறு கூறினார். அவரது முதுகில் கால் வைத்து பலர் படகில் ஏறினர். இந்த படம் சமூக வளைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மீனவர் செயல்சாலின் உதவிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன.

இதைக்கண்ட பிரபல கார் நிறுவனமான மஹிந்திரா, மீனவர் ஜெய்சாலின் சேவை மனப்பான்மையை பாராட்டி, அவருக்கு  தற்போது புதிதாக வெளியாகி உள்ள  ‘மராஸ்ஸோ’ ரக கார் ஒன்று பரிசளித்து கவுரவித்து உள்ளது.

இதற்கான நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. கேரள அமைச்சர், கார் சாவியை மீனவர் ஜெய்சாலிடம்  வழங்கினார்.

You may have missed