பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படம் கடந்த மார்ச் 13-ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது .

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுடன் கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் இவானா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அர்ஜுன், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது 👀லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனிடையே இதே தலைப்பில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஒரு படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.