மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,நடிப்பில் வெளியான படம் ‘ஹீரோ’.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. உதவி இயக்குநர் போஸ்கோ என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளிக்க, அதற்கு இயக்குநர் மித்ரன் தனது தரப்பிலிருந்து விளக்கத்தை மட்டுமே கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த கடிதத்தை வைத்து நீதிமன்றத்தை நாடினார் உதவி இயக்குநர் போஸ்கோ. நீண்ட நாட்களாக நடைபெற்ற அந்த வழக்கில் இறுதியாக போஸ்கோவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்த தீர்ப்பு வரும் முன்னரே ‘ஹீரோ’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கும், டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனத்துக்கும் விற்றுவிட்டது கே.ஜே.ஆர் நிறுவனம்.

தீர்ப்பின் நகலை பார்த்ததும் அமேசான் நிறுவனமோ தங்களுடைய தளத்திலிருந்து ‘ஹீரோ’ படத்தை நீக்கிவிட்டது.

இதனால் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது. தற்போது தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம் இரண்டுக்கும் பெற்ற பணத்தைத் திரும்ப அளிக்குமாறும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தைக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.