ட்விட்டரில் டிரெண்டான சிவகார்த்திகேயனின் ஹீரோ….!

சிவகார்த்திகேயனின் எஸ்கே15 ஆவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

பிஎஸ் மித்ரன் இயக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார்.

இந்த நிலையில், ஹீரோ டைட்டில் அறிவிக்கப்பட்டவுடன் இந்தியளவில் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. மேலும், டுவிட்டரில் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.