’நிதி கொடுப்பதை நிறுத்துங்கள்’’ கட்சிகளுக்கு  உயர்நீதிமன்றம் அறிவுரை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீட் தேர்வு தொடர்பான வழக்கில் கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்னர், நீதிபதிகள் சில உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு பயத்தில் 4 மாணவர்கள் அண்மையில் தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு தெரிவித்த கருத்துக்கள், நெற்றிப்பொட்டில் அறைந்த மாதிரி உள்ளது.

நீதிமன்றம் கூறிய அறிவுரை இது:

+ மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளை, பெருமைப் படுத்துவதை ஊடகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

+அது போல், தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பத்துக்கு லட்சக்கணக்கில் நிதி  கொடுக்கும் வழக்கத்தை அரசியல் கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

+அண்மைக்காலமாக இது போன்ற தற்கொலைகள் தமிழ்நாட்டில் அதிகரிக்க இந்த இரண்டு செயல்களுமே பிரதான காரணம்.

+இந்த இரண்டு நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டாலேயே தற்கொலை சம்பவங்கள் குறைந்து விடும்.

+நீட் தேர்வில் வெற்றிபெற முடியவில்லை என்பதற்காக  மானவர்கள் இது போன்ற விபரீதமான முடிவை எடுக்க வேண்டாம்.

+  வாய்ப்புகள் இந்த மாநிலத்தில் இல்லாவிட்டால் வேறு மாநிலம். இந்த நாட்டில் இல்லாவிட்டால் உலகம் முழுவதும் வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

-பா.பாரதி