தனியார் பாலை பரிசோதிக்க உயர்நீதிமன்றம் தடை! அரசுக்கு நோட்டீஸ்

சென்னை,

மிழகத்தில், தனியார் பாலில் கலப்படம் என்று கூறி, குச்சி பத்த வைத்து கொளுத்தி போட்டவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

இதுகுறித்த விசாரணையின்போது, தனியார் பாலை பரிசோதிக்க உயர்நீதி மன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் செயலுக்கு கண்ட னம் தெரிவித்து பால் முகவர்கள் சங்கம் மற்றும் தனியார் பால்நிறுவனங்கள்  தங்களது தரப்பு நியாயங்களை கூறினர்.

இருந்தாலும், அமைச்சரோ தான் ஏற்கனவே சொன்னதுதான் உண்மை என்றும், தனியார் பால் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது என்றும், அதில் கலப்படம்  இல்லை என்று ஆய்வு முடிவு வெளியானால், தான் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் கூறி மேலும் பரபரப்பை கூட்டினார்.

இந்நிலையில், அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பால் நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன.

அதில்,  பரிசோதனை என்ற பெயரில் தங்கள் நிறுவனத்தின் பால் மாதிரி சோதனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும்,  எங்கள் நிறுவன பால் மாதிரியை சோதனையிட உணவு பாதுகாப்புத்துறைக்கே அதிகாரம் உள்ளது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆவின் பால் வியாபாரத்தை பெருக்க தங்கள் நிறுவனங்கள் மீது அமைச்சர் அவதூறு பரப்புகிறார் என்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, ஆய்வு செய்யப்பட்ட முடிவுகளை சுகாதாரத்துறை செயலாளர் தாக்கல் செய்தார். அதில் எந்த பாலிலும் ரசாயணம் கலப்படம் செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, ஆதாரமில்லாமல் அமைச்சர் பேசக்கூடாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிப திகள், பால் கொள்முதல் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி தொழிலில் தமிழக அரசு தலையிட தடை விதிப்பதாக கூறி உள்ளனர்.

மேலும், ஹட்சன் மற்றும் விஜய் நிறுவனங்களின் பால் மாதிரிகளை பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து,  4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.