டிகர்  பாடல் ஒன்று பாடியுள்ள முத்துராமலிங்கம் படத்துக்கு,  பண விவகாரம் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரித்துள்ள படம் முத்துராமலிங்கம். ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக், நெப்போலியன் இணைந்து நடித்துள்ளனர்.  இளையராஜா இசைமைத்துள்ளார். இதில்  பஞ்சு அருணாச்சலம் எழுதியுள்ள .

இப்படத்தில், ‘தெற்கு தேச சிங்கமடா, முத்துராமலிங்கமடா”  என்ற பாடலை கமல் பாடியுள்ளார்.

படக்காட்சி

 

இந்தத் திரைப்படம் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த திரைப்பட தயாரிப்பாளர் விஜய் பிரகாஷ்,  பைனான்சியர் எம்.வி.பிரகாஷிடம் ரூ. 29 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்தத்தொகையை திருப்பி தரவில்லை என்பதால், படத்தைத் திரையிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.வி.பிரகாஷ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை திரையிட தடைவிதித்துள்ளது.