மணல் குவாரிகள் தடையை நீக்க முடியாது: அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்

சென்னை,

மிழகத்தில் மணல் குவாரிகள் செயல்பட மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டிருந்தது. அந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், மணல் குவாரிகள் செயல்பட விதி தடை தொடரும் என்றும், அதை நீக்க முடியாது என்று தமிழக அரசு மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை  கடந்த ஆண்டு நவம்பர்  29-ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

சுற்றுச்சூழல் நலன் கருதியும், வருங்கால சந்ததியினரின் நலன் கருதியும் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  மேலும், புதிய மணல் குவாரிகள் அமைக்கக்கூடாது என்றும்  தமிழகத்திற்கு தேவையான மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றும், அதற்கு தமிழக அரசு முறையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுக்கு தடை விதிக்க கோரி    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மேல்முறைடு செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, தடை விதிக்க முடியாது என ஐகோர்ட்டு அறிவித்து வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் வாதங்கள் முடிவடைந்து, நீதிபதிகள் கல்யாண சுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட 2 நீதிபதிகள் அமர்வு, 6 மாதங்களில் அனைத்து மணல் குவாரிகளையும் மூடவேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவையும் உறுதிசெய்தது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: High Court Bench has refused to ban against closed sand quarries for government appeal case of the state, மணல் குவாரிகள் தடை: அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்
-=-