தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமினை எதிர்த்த அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

மதுரை: 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள்  போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்ட 65 பேரை  மாவட்ட நீதிமன்றம்  ஜாமினில் விடுதலை செய்தது. ஆனால், தமிழக அரசு அதை எதிர்த்து, ஜாமினை ரத்து செய்யக்கோரி  மதுரை உயர்நிதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை  உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், அந்த பகுதி மக்களை கைது செய்யக்கூடாது, அச்சுறுத்தக்கூடாது என பல்வேறு உத்தரவுகளை மதுரை உயர்நீதி மன்ற கிளை பிறப்பித்திருந்தது.

ஆனால், காவல்துறையினர் அதையும் மீறி, கலவரத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் 65  பேரை கைது செய்து மாவட்ட தலைமை நீதித்துறை நடுவா சாருஹாசினி முன்பு ஆஜாபடுத்தினர்.

ஆனால்  வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர்  65 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில்,  கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரி தமிழக அரசு மதுரை உயர்நீதி மன்ற கிளையில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

அதில், வழக்கை முறையாக விசாரிக்காமல் 65 பேரையும் விடுவித்து தலைமை நீதித்துறை நடுவா உத்தரவிட்டுள்ளாா. எனவே அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.  மனுவினை தள்ளுபடி செய்து, சென்னை உயாநீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது 65 பேரிடமும் மாவட்ட நீதித்துறைற நடுவர் பெற்ற வாக்குமூலத்தை சமாபிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: dismissed Government appeal petition against bail of 65 arrested in Tuticorin, High Court Branch Madurai, தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரையும் விடுதலைசெய்ய நீதிபதி அதிரடி உத்தரவு
-=-