சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி! பிரனாப் முகர்ஜி

டில்லி,

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக டில்லி ஐகோர்ட்டு தலைமை  நீதிபதி இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல்  பதவி உயர்வு பெற்று  உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது.

அதையடுத்து, டில்லி உயர்நீதி மன்ற நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜியை, சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்திரா பானர்ஜி, 1985ம் ஆண்டு, கொல்கத்தா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். 17 வருட வழக்கறிஞர் அனுபவத்துக்குப் பிறகு, 2002ஆம் ஆண்டு கொல்கத்தா நீதிமன்றத்தின் நீதிபதி யாக பதவியேற்றார்.

அதன்பிறகு, 2016 ஆகஸ்டு மாதம் முதல் டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

தற்போது உச்சநீதி மன்ற கொலீஜியத்தின் பரந்துரையின் பேரில் இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி விரைவில் பதவியேற்பார்.

சென்னை ஐகோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக காந்த கமாரி பட்நாகர்  (15 June 1992 – 1 July 1993) ஏற்கனவே பதவி வகித்துள்ளார். அதையடுத்து, சென்னை ஐகோர்ட்டின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி  நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.