ரூ.15000 நிவாரணம் வழங்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

--

சென்னை: வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், தங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தற்போதைய கொரோனா பரவல் மற்றும் நீடித்த ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால், தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி, தங்களுக்கு அரசின் சார்பில் ரூ.15000 நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.

ஆனால், அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.