எம்எல்ஏக்களை மீட்க கோரிய மனுக்கள் டிஸ்மிஸ்! ஐகோர்ட்டு

சென்னை,

திமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக சசிகலா தமிழக முதல்வராக ஆட்சி அமைக்க முயற்சி செய்தார்.  ஆனால், அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு சென்றுள்ளதால், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்துள்ளனர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.

சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து அதிமுகவின் பெரும்பாலான எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் கேல்டன் பே ரிசார்டில் சிறை வைத்தனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு தங்கி யுள்ள எம்எல்ஏக்கள் எந்தவித வெளித்தொடர்புமின்றி பயத்தோடு நாட்களை கடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தங்கள் தொகுதி எம்எல்ஏக்களை காணவில்லை என பல தொகுதி மக்கள் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்களான கிருஷ்ணராயபுரம் கீதா, குன்னம் ராமச்சந்திரனை மீட்கக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்று விசாரணைக்கு வந்தபோது,  அந்த  ஆட்கொணர்வு மனுவை  டிஸ்மிஸ் செய்து உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.