துரை

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் இயற்ற வேண்டும் என டிராபிக் ராமசாமி கோரியிருந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்துள்ளது.

டிராபிக் ராமசாமி

சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை இட்டனர்.  அப்போது ஆர் கே நகர் இடைத்தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதற்கான ஆதாரம் கிடைத்ததாக கூறப்பட்டது.  அந்த ஆதாரத்தில் முதல்வர், மற்றும் அமைச்சர்கள் பெயரும் காணப்பட்டதாக சொல்லப்பட்டது.   இதன் காரணமாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு மனுவை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “முதல்வர், மற்றும் அமைச்சர்கள் பெயர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆவணத்தில் உள்ளது.  எனவே இவர்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.  மேலும் ஆளுநர் இதில் தலையிட்டு உடனடியாக முதல்வர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் இயற்ற வேண்டும்” என ராமசாமி குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் மற்றும் சாமிநாதன், மனுதாரர் போதுமான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி இந்த மனுவை நிராகரித்து விட்டனர்.